Aham Vyaktam

Lucidity Incognito Lunacy

Thursday, June 12, 2008

Author Anonymous

Posted by Anu

பாலைவனமாய் இருந்தது பேருந்து நிறுத்தம்..
இருபது நிமிடங்களாக காத்திருக்கிறேன்
இன்னும் பத்து நிமிடங்கள் கரைக்க வேண்டியிருந்தது

பே ஏரியாவில் இந்தியர்கள் அதிகம் என்றார்களே
எங்கு பார்த்தாலும் வெள்ளையர்கள்
அதிலும் பெண்கள் மிகக் குறைவு

கண்கள் மூடி அமர்ந்திருந்த நான்
லேசாக இடப்பக்கம் திரும்பிப் பார்த்தேன்
தூரத்தில் ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்

நிச்சயம் இந்தியப்பெண்
வேறு யாருக்கு வரும் இந்த நளினம்
வெற்றாக இருந்த மனம் துரிதமானது
onsite வந்திருக்கும் software engineer ஆக இருப்பாளோ

இடப்பக்கம் நின்றாள்
எனக்கும் அவளுக்கும் பத்து அடி தூரம்
முகம் தெரியவில்லை
மிகச்சிறிய உடலமைப்பு
எளிமையான தோற்றம்

சிறிது முன்னால் நகர்ந்தேன்
முகம் தெரியும் என நினைத்து

வந்தாள் ஒரு வெள்ளைப்பெண் அவளை நோக்கி
இவள் அவள் பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தாள்
சே! உள்ளதும் போயிற்று என நினைக்கும்போது
இவள் அவளிடம் சைகையில் ஏதோ சொல்ல
அவள் நகர்ந்தாள்
இவள் அவளுக்கு வழி சொன்னாள் போல..

எனக்கு மறுபடியும் அவளது பாதி உருவம்
பேருந்து வரும் பாதையே பார்த்தாள்
ஏனடி என் பக்கம் திரும்ப மாட்டேன் என அடம்!

காற்று வேகமாக அடித்தது
என்னைக் கடந்து அவளை நோக்கி
அவள் கேசம் கலைத்து

அவள் முகத்தில் கேசம் விழுந்திருக்க வேண்டும்
என்னை நோக்கித் திரும்பினாள்
காற்றை எதிர்கொண்டு கேசம்-முகம் ஊடல் முறிக்க

எனை விட்டுச்சென்ற காற்றை நொந்துகொண்ட நான்
உடனே வாபஸ் வாங்கி, நன்றி கூறினேன்
காற்று எதிர் திசையில் சென்று
அவள் கண்களை என் திசையில் திருப்பியதற்காக!

அவள் முகம் நன்றாக தெரிந்தது - முழுக்க சாத்விகம்
கண்ணாடி இல்லாமல் இன்னும் லக்ஷனமாக இருப்பாள்.

கேசத்தை கோதிவிட்டு முதன் முறையாய் என்னை பார்த்தாள்!

அட! சட்டென திரும்பிவிட்டாளே!
என் கண்கள் அவள் கண்களை சந்தித்துக்கொண்டிருப்பது தெரிந்தும்
அவள் கண்டுகொள்ளவில்லையே!

ஒரு வெள்ளையனை பார்த்திருந்தால் புன்னகைத்திருப்பாள்
தெரியாதவர்களுக்கும் "hello how are you" கேட்கும் கலாசாரமாயிற்றே!
நான் இந்தியன் என்பதால் இந்திய கலாசாரம் அவளுள் புகுந்து விட்டதா?
ஒரு சிரிப்பு சிரித்தால் என்னவாம்.

அவள் ஒரு பேருந்தில் ஏற தயாரானாள்
தைரியத்தை துணைக்குக் கூப்பிட்டு
அவளிடம் சென்று "hello how are you" என்றேன்
அவள் "fine, thank you" என்றாள்

"are you waiting for bus?" என்றேன்
"என்ன அபத்தமான கேள்வி" என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே
சொன்னாள் "No, I drove this bus and it broke down, waiting for mechanic" என்றாள்

அட! இவள் நக்கல் கூட அடிப்பாளா?
சிரித்தாள்
கையிலிருந்த தாள் பார்த்து "நீங்க தமிழா" என்றாள்

நான் ஆச்சரியத்தில் "ஓ! நீங்களும் தமிழா" என்று வழிந்தேன்
"பஸ் வந்தாச்சு. பை" சொல்லிப் பறந்தாள்

நான் இதை எழுதிக்கொண்டு அவள் ஏறிய பஸ்ஸில் தான்
நானும் ஏற வேண்டும் என்பதை மறந்தேன்

மறுபடியும் பாலைவனத்தில் 30 நிமிடங்கள்....

2 comments:

Unknown said...

kalynam aga pora ponnu , open a sight adikara letter ellam blog post panalama ..

as patti says .. kali kalam ada ethu !

Sachi Kesavan said...

Well just have to blame my poor/almost zero knowledge in tamizh (hope thts not contradictory... ;) ).

Tried reading word by word taking my own time but still to complete it...

Any translation guide available..?? ;)